Tuesday 4 July 2017

நூலக செயல்பாடு





நேற்று ஒன்பதாம் வகுப்பு கணக்கு பாடவேளை முடிந்து வெளியேறும்போது அடுத்த பாடவேளை என்ன என்று கேட்ட்தற்கு நூலகம் என்றனர் மாணவர்கள் நூலகம் செல்லலாமா என்றதும் உற்சாகம் தொற்றிக்கொண்டது மாணவர்களிடம். வழக்கமாக நூலகப் பாடவேளையின்போது வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளனரோ அத்தனை நூல்களை வகுப்புத்தலைவனிடம் கொடுத்து அனைவருக்கும் வழங்கி பாடவேளை முடிந்ததும் கொண்டுவந்து நூலகத்தில் வைப்பது வழக்கம். நூல்களை அவர்களே தேர்ந்தெடுத்துப் படிக்க வாய்ப்பு இருக்காது. இன்று நீங்களே ஒரு நூலைத்தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும். இன்று என்ன நூல் படித்தீர்கள் அதை எழுதியது யார் நூலில் உன்னைக்கவர்ந்த அம்சம் எது என்று ஒரு குறிப்பேட்டில் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் ஒவ்வொரு மாதக்கடைசியிலும் அந்த குறிப்புகள் அடிப்படையில் யார் நூலகத்தைச் சிறப்பாக பயன்படுத்துகிறீர்கள் என்று கண்டறிந்து பரிசு வழங்கப்படும் என்று கூறியதும் மாணவர்களிடம் மகிழ்ச்சி முழக்கம். இது அவர்களை வாசிக்கத்தூண்டும் என நினைக்கிறேன் ஒரு மாதம் காத்திருங்கள் முடிவுகளை அறிந்துகொள்ள. இந்த நாள் எழுத்தாளர் திரு வே.சபாநாயகம் அவர்கள் மறைந்த நாள் என்பது இன்றுதான் நினைவுபடுத்துகிறது முகநூல். இங்கே அந்த குடும்பத்தினரை நன்றியோடு நினைவுகூர்கிறோம். அவர்கள் இல்லை எனில் எம் பள்ளிக்கு இப்படி ஒரு நூலகம் சாத்தியமில்லை.